பீடோர் காட்டுக்கு அருகே இயூரோகொப்டர் உலங்கூர்தி காணாமல் போனது ! – வீ கா சியோங் தகவல்

Malaysia, News

 48 total views,  2 views today

– குமரன் –

பெட்டாலிங் ஜெயா – 11 செப் 2022

நீகாமனுடன் பறந்து சென்ற உலங்கூர்தி ஒன்று கோலாலம்பூர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பில் இருந்து காணாமல் போனதாக போக்குவத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

இயூரோகோப்டர் வகையைச் சேர்ந்த அந்த உலங்கூர்தி காணால் போனதாக பொது வான்போக்குவரத்து அதிகாரத்துவ அமைப்பான CAAM தெரிவித்ததாக அவர் சொன்னார்.

தனியார் நிறுவனத்திற்ௐஉச் சொந்தமான அந்த உலங்கூர்தி இன்று நண்பகல் 12 . 16 மணிக்கு இறுதியாக பீடோர் அருகே உள்ள வனப்பகுதிக்கு மேல் பறந்ததாக அறியப்படுகிறது.

முற்பகல் 11.37 மணிக்கு சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்த இலங்கூர்தி நண்பகல் 12.37 மணிக்கு ஈப்போ சுல்தான் அஸ்லான் ஷா வானூர்தி நிலையத்தில் தரை இறங்கி இருக்க வேண்டும்.

இந்த உலங்கூர்தியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது CAAM மிக அண்மைய நிலவரத் தகவலை அறிவிக்கும் என அமைச்சர் சொன்னார்.

Leave a Reply