
‘பீஸ்ட்’- அரசியலுக்கும் பாதுகாப்புக்குமான யுத்தம்
336 total views, 2 views today
ரா.தங்கமணி
ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.
சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தின் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியீடு காணவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

வீர ராகவன் எனும் கேரக்டரில் RAW ஏஜெண்டாக விஜய் நடித்துள்ள இந்த படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே ‘அரபிக்குத்து’ பாடலும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலும் வெளியாகி சாதனை படைத்து வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் ட்ரெய்லர் மற்றொரு சாதனையை படைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இயக்குனர் நெல்சனின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை போன்று இதிலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத சூழலில் ஆக்ஷன் நிறைந்த அதிரடி காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்தாகும்.
“Because I’m not a Politician; I’m a Soldier’, ;இருந்தாலும் நீங்க பன்ற இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட்டாகாது’ என நடிகர் விஜய் சொல்லும் ஒற்றை வார்த்தையிலேயே இது அரசியலுக்கும் பாதுகாப்புக்குமான ஒரு யுத்த களமாக இருக்கலாம் என கணிக்க முடிகிறது.
தோட்டாக்கள் பாய்ந்து பறக்க, வெடிகுண்டுகள் வெடித்து சிதற.. ரத்தம் சொட்ட சொட்ட பக்கா விஜய் மாஸ் படமாகவே பீஸ்ட் உருவாகியுள்ளது என நம்பலாம்.
Beast Trailer Link: https://www.youtube.com/watch?v=0E1kVRRi6lk