பீஸ்ட் : கத்தாரிலும் தடை (Video News)

Cinema, India, News

 240 total views,  4 views today

சென்னை – 12 ஏப்பிரல் 2022

குரல் : டாஷினி இந்திர பத்மன்

குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்து உள்ளனர். பயங்கரவாதிகள் பற்றிய சர்ச்சை காட்சிகளுக்காகவே கத்தார் அரசும் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. பயங்கரவாதிகள் வணிக வளாகத்துக்குள் புகுந்து, மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுப்பதும், அவர்களுடன் மோதி மக்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதும் கதையாக உள்ளது.

பீஸ்ட் படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிடுவதற்கு அனுமதி மறுத்துவிட்டது. பீஸ்ட் படத்தில் பயங்கரவாதிகள் குறித்து சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், இதனாலேயே குவைத் தணிக்கை குழு தடை விதித்ததாகவும் கூறப்பட்டது.

Leave a Reply