பீஸ்ட் vs  கே.ஜி.எப்- தேர்தல் கிடையாது- யாஷ்

Cinema, India, News

 201 total views,  4 views today

சென்னை-

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. டிரைலர் வெளியீட்டிற்காக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடித்தி டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். அந்த டிரைலர் வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு படக்குழு பதில் அளிக்கும் நிகழ்வு நடந்தது. 

இதில் பத்திரிக்கையாளர் ஒருவர் பீஸ்ட் படத்தையும் கே.ஜி.எப் படத்தையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு நடிகர் யாஷ் அவர்கள் அளித்த பதில், இது எலக்‌ஷன் கிடையாது, கே.ஜி.எப் vs  பீஸ்ட் என்று முடிவு செய்ய. எலக்‌ஷனில் ஒரு வாக்கு தான் இருக்கு அது யார்கிட்ட செல்ல வேண்டும் என்று சண்டை போட வேண்டும். இது சினிமா ரசிகர்கள் பீஸ்ட் படத்தையும் பார்க்கலாம் என்னுடைய படத்தையும் பார்க்கலாம். பீஸ்ட் படம் வெளியாவது அவர் ரசிகர்களுக்கும் பண்டிகை தான். நான் நிறைய பார்க்கிறேன் பீஸ்ட் vs  கே.ஜி.எப் என்று பேசுகிறார்கள், அது சரியானது இல்லை. நான் நம்புகிறேன் இந்த உலகம் சினிமாவுக்காக இயங்குகிறது. அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் என் படம் பிடிக்கும். எல்லோரும் என் படத்தை பார்க்கட்டும் நானும் பீஸ்ட் படத்தை பார்க்கிறேன் என்று பதிலளித்தார்.

Leave a Reply