புகைப் பழக்கம் கொண்டுள்ள 188,020 சிறார்கள்

Malaysia, News

 207 total views,  3 views today

கோலாலம்பூர்-

12 வயதுக்குட்பட்ட 188,020 சிறார்கள் சிகரெட், மின் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர் என்று முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2016இல் பொது சுகாதார நிறுவனம் நடத்திய மலேசிய இளம் பருவத்தினரிடையே புகையிலை, மின் சிகரெட் பயன்பாடு குறித்த ஆய்வின் அடிப்படையில் இவ்வெண்ணிக்கை அமைந்துள்ளது.

125,714 சிறார்கள் சிக்ரெட்டுகளையும் 62,306 சிறார்கள் மின் சிகரெட்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்று கோத்தா கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சுகாதார அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.

Leave a Reply