புகையிலை – சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டப் பரிந்துரைக்கு ஆதரவளிப்பீர் ! – டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா

1 Minute News, Health, Malaysia, News

 122 total views,  1 views today

புத்ராஜெயா – 29 ஜூலை 2022

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் புகையிலை – சிகரெட் தடுப்புச் சட்டப் பரிந்துரைக்குப் பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா வலியுறுத்தினார்.

தமது டுவிட்டர் பக்கத்தின் வழி இது குறித்து கருத்துப் பதிவிட்ட அவர், இச்சட்டம் நடப்புக்கு வருவது மக்களின் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிகரெட், மின் சிகரெட் எனக் கூறப்படும் வேப், இதர புகைக்கும் பொருட்கள் ஆகியவற்றை 2007 ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் பிறந்த இளம் தலைமுறையினரிடையே தடை விதிக்கப்பட இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

சிகரெட், வேப் உட்பட புகைக்கும் பழக்கம் இல்லாத ஒரு புதிய தலைமை முறையை உருவாக்கம் நாம் அமைவரும் அணி திரள வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கடந்த புதன்கிழமையன்று, புகையிலை – சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டப் பரிந்துரையை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக வாசித்தார்.

அந்தச் சட்டத்தின்படி, 1 சனவரி 2007 முதல் பிறந்த இளம் தலைமுறையினர் புகையிலை, சிகரெட் சம்பந்தப்பட்டப் பொருட்களை வாங்க, பயன்படுத்த, வைத்திருக்கத் தடை விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு ரிம 5,000க்கு மேற்போகாத தண்டம் விதிக்கப்படும்.

Leave a Reply