புதிய அமைச்சரவையில் கணபதிராவுக்கு வாய்ப்பு வழங்குக

1 Minute News, Malaysia, News, Politics

 238 total views,  1 views today

இரா. தங்கமணி | 28-11-2022

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று ஆதரவுக் குரல் எழுந்துள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும்போதே இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி, பேருந்து கட்டணம், இந்திய சிறு வணிகர்களுக்காக ஐ சீட் பிரிவு, அடையாள அட்டை, குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண மை செல் பிரிவு, இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய சமூகத் தலைவர்கள் என தனது தலைமைத்துவத்தில் ஆக்ககரமான திட்டங்களை வகுத்துள்ளார் கணபதிராவ்.

அவரின் சேவை சிலாங்கூரில் மட்டுமல்லாது நாடெங்கும் எதிரொலிக்க அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று இந்திய சமூகத் தலைவர்களான ஜசெகவைச் சேர்ந்த கோபி முனியாண்டி, பிகேஆரைச் சேர்ந்த திருமதி தேவி, அமானாவைச் சேர்ந்த அருள்நேசன், மாநகர் மன்ற உறுப்பினர்கள் பிகேஆரைச் சேர்ந்த கனகராஜா, ஜசெகவைச் சேர்ந்த முரளி, மரியா, அமானாவைச் சேர்ந்த புஷ்பா ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply