புதிய பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்

Malaysia, News

 187 total views,  1 views today

கோலாலம்பூர்-

புதிய வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலனில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றின் தாக்கம் இருந்தபோதிலும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையிலான ஆக்ககரமான திட்டங்கள் அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

புதிய வாழ்க்கை முறையை வாழ்வதற்கான சூழலை மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர். முகக் கவசம் இல்லாமல் மக்கள் வெளியே வந்தால் பிறர் அவர்களை கண்டிக்கும் நிலை உள்ளது. கோவிட் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply