
புதிய வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ள 1.1 மில்லியன் இளம் வாக்காளர்கள்
363 total views, 1 views today
கோலாலம்பூர்-
இவ்வாண்டு ஜூன் 16ஆம் தேதி வரையிலும் 18 வயது முதல் 20 வயது வரையிலான 1,141,749 இளையோர் புதிய வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டிய பிரதமர் துறை (நாடாளுமன்றம், சட்டம்) துணை அமைச்சர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சூடின், 21,113,234 இளையோர் வாக்காளர்களில் இது 5.4% ஆக உள்ளது என்றார்.
எஞ்சிய 19,971,485 வாக்காளர்கள் (94.6%) 21 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் என்று மக்களவையில் எழுப்பப்பட்ட வாய்மொழி கேள்வி நேரத்தில் அவர் இதனை தெரிவித்தார்.