புதுக்கவிதைப் படைப்பாளர்களுக்கு ஓர் இனிய செய்தி! – டத்தோ ஸ்ரீ மு சரவணன் அறிவிப்பு

Malaysia, News

 113 total views,  1 views today

கோலாலம்பூர் – 16 ஆகஸ்டு 2022

மலேசியக் கவிஞர்களின் படைப்புகள் என்றும் நிலைத்திருக்கவும் பதிவுகளாகப் பாதுகாக்கப்படவும் உயரிய நோக்கோடு மனிதவள அமைச்சரும் மஇகாவின் தேசியத் துணைத்தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு சரவணன் , கடந்த ஆண்டு ப. இராமு அறக்கட்டளையைத் தோற்றுவித்தார்.

மலேசியத் தமிழ்க்கவிஞர்களுக்கு ப.இராமு அறக்கட்டளை ஒரு களம் அமைத்துள்ளது. அண்மையில் ‘மலையகத்தொகை’ எனும் மரபுக்கவிதைத் தொகுப்பு வெற்றிகரமாக வெளியீடு கண்டது. இதைத் தொடர்ந்து இப்போது புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு காணவுள்ளது.

பல கவிஞர்களுடைய படைப்புகள் உள்நாட்டு வார, மாத இதழ்கள், நாளிதழ்கள், புலனக் குழுக்கள் எனப் பல்வேறு தளங்களில் பதிவிடப்பட்டு வந்தாலும் பல தரமான படைப்புகள் வெளிவராமலும் ஆவணப்படுத்தப்படாமலும் முடங்கிப்போவது நம்மை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.

படைப்பாளர்களுடைய படைப்புகள் நூல் வடிவில் இடம்பெறாமல் போனதற்குப் பொருளாதாரமும் ஒரு காரணமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் மரபுக்கவிதை போன்று, புதுக்கவிதைத் துறை சார்ந்த நல்ல படைப்பாளிகளை அடையாளங்கண்டு அவர்களின் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக்கும் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளார் மலேசிய மண்ணின் இலக்கியக் காவலன் டத்தோ ஸ்ரீ மு சரவணன்.

எனவே, புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் தாங்கள் எழுதியவற்றில் சிறந்த மூன்று கவிதைகளை அனுப்பி வைக்கலாம். அவற்றிலிருந்து தெரிவு செய்யப்படும் சிறந்த கவிதைகள் கவிஞர்களின் தன்குறிப்போடு ‘புதுக்கவிதைத் தொகுப்பு’ நூலாக வெளியிடப்படும்.

நூல் வெளியீடு காண்பது மட்டுமல்லாது ஓர் இலக்கிய விழாவாகவும் அது மலரும். ஒவ்வோர் ஆண்டும் சிறந்த கவிஞர்கள் அடையாளங்கண்டு கெளரவிக்கப்படுவர்.

ப.இராமு அறக்கட்டளை வாயிலாக வெளியிடப்படும் புதுக்கவிதைத் தொகுப்பு ஒவ்வோர் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.

விதிமுறைகள்

  1. மலேசியர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
  2. விரும்பிய தலைப்புகளில் குறைந்தது ஒரு பக்கத்தில், அதிகபட்சமாக இரண்டு பக்கங்களில் கவிதை எழுதப்பட்டிருக்க  வேண்டும்.
  3. ஏற்கெனவே எழுதிய அல்லது புதிதாக எழுதிய கவிதைகளை அனுப்பலாம். ஆனால் அவை அச்சிடப்பட்டு, வெளியிடப்படாதவையாக  இருக்க வேண்டும்.
  4. கவிதையுடன் சுய விவரக்குறிப்பு, புகைப்படம் (அரைப்படம்) முகவரி, தொடர்பு எண் ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  5. கவிதைகள் தனிமனிதச் சாடலாகவோ சமய, இன, அரசியல் அவதூறு கூறுகளைக் கருப்பொருளாகக் கொண்டவையாகவோ இருக்கக் கூடாது.
  6. ஒருவர் 2 அல்லது 3 கவிதைகள் அனுப்பலாம்.
  7. கவிதைகளைக் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு வழியில் மட்டும் எதிர்வரும் 15 செப்டம்பர் 2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல்                       : puthukavithai22@gmail.com

புலன எண்                   : 014-9034536

கூகுள் பாரம்                      : https://forms.gle/ohNaieSosjrGBN8L6

அஞ்சல்  முகவரி    : No 14, Kompleks Damai, Jalan Lumut, 50400 Kuala Lumpur

  • நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் மட்டுமே தொகுப்பில் இடம்பெறும்.
  • அனுப்பி வைக்கப்படும் கவிதைகளில் தேவைக்கேற்ற திருத்தங்கள் செய்து பின்னர் அவற்றைத் தொகுப்பில் சேர்த்து வெளியிட ஏற்பாட்டுக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

Leave a Reply