புத்துயிர் பெறும் துருவ நட்சத்திரம்

Cinema, News

 324 total views,  1 views today

சென்னை-

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பட வேலைகளை 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கினர். வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. 

படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2020-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்து அப்போதும் வரவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் முடங்கியது. 

இந்நிலையில் படத்தின் பணிகளை கௌதம் மேனன் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக விக்ரம் அவருடைய டப்பிங் பணிகளை கொடுத்து வருவதாவும் தெரிகிறது. இதனிடையில் படத்தின் மீதமுள்ள பணிகளையும் இயக்குனர் கௌதம் மேனன் தொடர்ந்து செய்து வருவதால், துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply