புந்தோங்கில் போட்டியிடும் வாய்ப்பு; டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு நன்றி- ஜெயகோபி

Malaysia, News, Politics

 99 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தமக்கு வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ள மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ,விக்னேஸ்வரனுக்கு  தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பேரா மாநில மஇகா துணைத் தலைவர் எஸ்.ஜெயகோபி தெரிவித்தார்.

மஇகாவில் அடிமட்ட தொண்டனாக தொடங்கிய எனது அரசியல் பயணத்திற்கு ஓர் அங்கீகாரமாக இந்த அறிவிப்பை கருதுகிறேன். பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர், தேசிய மஇகா இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர், ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர், ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் என பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளேன்.

2013, 2018 ஆகிய இரு தேர்தல்களிலும் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும் அவை கைநழுவிச் சென்றன. ஆயினும் மஇகாவுக்கும் அங்குள்ள மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாத சேவையை வழங்கி வந்துள்ளேன்.

தமது சேவையின் மீது நம்பிக்கை வைத்து வரும் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்கப்படும் என டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் செய்துள்ள அறிவிப்பு மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

புந்தோங் தொகுதியில் அதிகமான இந்திய வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த பொதுத் தேர்தல்களை காட்டிலும் இம்முறை இந்திய வாக்காளர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மனமாற்றம் நிச்சயம் தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்று ஜெயகோபி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

விளம்பரம்

Leave a Reply