புந்தோங் மக்களின் குரலாக ஒலிப்பேன் – துளசி மனோகரன்

Malaysia, News, Politics

 81 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ-

புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் பிஎச் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கும் தாம் புந்தோங் மக்களின் குரலாக ஒலிப்பேன் என்று குமாரி துளசி மனோகரன் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக புந்தோங் பகுதியில் களமிறங்கி சேவையாற்றி வரும் தாம் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து வைத்துள்ளேன். புந்தோங் மக்களின் பிரதிநிதியாக தாம் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றுக்கான தீர்வை நிச்சயம் கொண்டு வருவேன்.

அதே நேரத்தில் தமது வெற்றி மட்டுமல்லாது பேரா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்படுவதும் அவசியமானதாகும். பேரா மாநிலத்தை பிஎச் கூட்டணி கைப்பற்றும் நிலையில் ஆட்சி அதிகாரத்துடன் மக்களுக்கு இன்னும் பல மேம்பாட்டுத் திட்டங்களை நிச்சயம் கொண்டு வர முடியும்.

அதே வேளையில் புந்தோங் தொகுதியில் பல முனைப் போட்டி நிலவுவதாக நம்பப்படும் நிலையில், ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. சக போட்டியாளர்களை மதிக்கிறேன். மக்களுக்கான சேவையை வழங்க போராடும் அனைவரின் உணர்களையும் நான் மதிக்கிறேன். நமக்குள்ளான போட்டி ஆரோக்கியமானதாக அமைந்திட வேண்டும் என்று விரும்புவதாக துளசி மனோகரன் தெரிவித்தார்.

மேலும் தாம் புந்தோங் வேட்பாளராக களமிறங்கியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பிஎச் கூட்டணியின் தலைமைக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

Leave a Reply