புந்தோங் வேட்பாளர் ஜெயகோபி- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 192 total views,  1 views today

ரா.தங்கமணி

புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளராக பேரா மாநில மஇகா துணைத் தலைவர் எஸ்.ஜெயகோபி களமிறக்கப்படுவார் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்தார்.

கட்சியிலும் தொகுதியிலும் சிறந்த சேவையை வழங்கி வந்துள்ள ஜெயகோபியே புந்தோங் தொகுதிக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளாக அங்கு சேவையாற்றி வரும் அவரை புறக்கணித்து விட்டு வேறொருவரை களமிறக்குவது சிறந்த அணுகுமுறையாகாது என்று இன்று சுங்கை சிப்புட் தேமு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

ஈப்போ பாராட் தொகுதி மஇகா தலைவர், ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் ஜெயகோபி, இதற்கு முன்னர் பேரா மாநில இளைஞர் பிரிவு முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Leave a Reply