புனித இரமலான் பெருநாளை முன்னிட்டு நோன்பின் தொடக்கம்

Malaysia

 254 total views,  1 views today

கோலாலம்பூர் – 4 ஏப்பிரல் 2022

இன்னும் ஒரு மாத காலத்தில் புனித இரமலான் பெருநாளைக் கொண்டாட விருக்கிறோம். அதனை முன்னிட்டு இன்று அனைத்து முஸ்லீம் நண்பர்களும் நோன்பைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள்.

இன்று தொடக்கம் அடுத்த ஒரு மாத காலத்திற்கு எந்தத் தங்கு தடையுமின்றி, உறவுகளோடு இனிதே நோன்பைக் கடைப்பிடிக்க அனைத்து முஸ்லீம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

பாவத்தைப் போக்கும் ஈகைத் திருநாளை முன்னிட்டு நோன்பைக் கடைப்பிடிப்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாகும். பசி, தாகம் மட்டுமன்றி தீய செயல்களைச் செய்யாதிருத்தலும், தான தருமங்கள் செய்வதும் நோன்பின் அடையாளமாகும். உன்னத எண்ணத்தோடு நோன்பை அனுசரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

முஸ்லீம் அன்பர்களுக்கு நோன்பின் தொடக்கம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம. இ. கா. தேசியத் துணைத் தலைவர்

Leave a Reply