புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு காலாவதி தேதி கிடையாது- அனுவார் மூசா

Uncategorized

 91 total views,  1 views today

கோலாலம்பூர்-

மத்திய அரசுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான காலாவதி தேதி எதுவும் இல்லை என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தை மற்றும் அமலாக்கக் குழுவின் உறுப்பினர் டான்ஸ்ரீ அன்னுார் மூசா கூறினார்.

மறுபுறம், 15வது பொதுத் தேர்தலை (GE15) ஜூலை 31 க்கு முன் நடத்த வேண்டாம் என்று அரசாங்கமும் PH கூட்டணியும் ஒப்புக்கொண்டதாக அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகும் தேதி இல்லை, பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர், அதை சரிசெய்ய வேண்டும், (பொது) தேர்தலின் தேதியை ஜூலை 31 க்கு முன் நடத்தக்கூடாது என்று ஒரு காலக்கெடு உள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் வரை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமருக்கு ஆதரவளிக்கிறது. நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்ற அதிகாரம் பிரதமரின் கையில் உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply