புற்றுநோயை எற்படுத்தக்கூடிய வேதியியல் பொருள் இருப்பதால் மலேசியச் சந்தையில் இருந்து விலகிய Haagen-Dazs வெண்ணிலா பனிக்கூழ் !

Malaysia, News

 247 total views,  1 views today

கோலாலம்பூர் – 13 ஆகஸ்டு 2022

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய Ethylene Oxide எனும் வேதியியல் பொருள் இருப்பதால் Haagen-Dazs வெண்ணிலா சுவை பனிக்கூட் மலேசியச் சந்தையில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பின் அண்மைய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த சுவை பனிக்கூழ் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சந்தையில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்துத் தகவல் அளித்த மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவிக்கயில், கடந்த ஜூலை மாதம் இவ்விவகாரம் குறித்து தமது அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததாகவும் உகந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாகவும் சொன்னார். மேலும், அந்தப் பனிக்கூழைத் தயாரிக்கும் நிறுவனம் தாமே முன் வந்து அவற்றை சந்தையில் இருந்து மீட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

Ethylene Oxide (ETO) எனும் வேதியியல் பொருள் பூச்சிக் கொல்லி மருந்தாகவும் சலவைப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றதாகும். உணவுப் பொருட்களில் கலக்கப்படக் கூடாத இந்த வேதியியல் பொருளை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டால் வாந்தி, பேதி, தலை வலி, மூச்சுத் திணறல் ஆகியவற்றோடு மரணத்தைக் கூடக் கொன்டுவரும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து மேலதிகத் தகவல்களைப் பெற SISPAA இணையப் பக்கத்தையோ அல்லது உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் முகநூல் பக்கத்தையோ நாடலாம்,

Leave a Reply