புல்லுருவிகளை மன்னிக்க முடியாது ! – கணபதிராவ் சாடல்

Malaysia, News, Politics, Polls

 161 total views,  1 views today

இரா. தங்கமணி

ஷா ஆலம் – 4 செப் 2022

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த புல்லுருவிகளை மன்னிக்க முடியாது என்று சிலாங்கூர் மாநில மந்திர் பெசார் வீ.கணபதிராவ் சாடினார்.

22 மாதங்கள் மட்டுமே ஆட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை ‘ஷராட்டன் நகர்வின்’ வழி கவித்தனர்.

22 மாத கால ஆட்சியில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வி கண்டது என சொல்பவர்கள் யார்?

அன்றைய அரசாங்கத்தில் பிரதமராக இருந்தது துன் மகாதீர். உள்துறை அமைச்சராக இருந்தது டான்ஸ்ரீ முஹிடின் யாசின். பொருளாதார அமைச்சராக இருந்தது டத்தோஸ்ரீ அஸ்மின் அலி.


இவர்கள் பக்காத்தான் ஹராப்பானை கவிழ்த்து விட்டு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை தோற்றுவித்து நம்மை குறை சொல்கின்றனர்.

5 ஆண்டுகால ஆட்சியில் வெறும் 22 மாதங்கள் மட்டுமே ஆட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியால் முழுமையான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை என்று தேமு,பிஎன்-ஐ நிராகரிப்போம் நிகழ்வில் கலந்து கொண்டபோது கணபதிராவ் இவ்வாறு சொன்னார்.

ஒரு மருத்துவர் தனது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரண்டு மணி நேரம் தேவைப்படும் பட்சத்தில் இருபது நிமிடங்கள் கடந்த பின்னர் அந்ந மருத்துவரை மாற்றி வேறொருவரை நியமித்து அறுவை சிகிச்சை பலனளிக்காமல் போனால் முந்தைய மருத்துவரை குறை சொல்வது நியாயமாகுமா?

அதேபோல்தான் பக்காத்தான் ஹராப்பானுக்கு முழுமையான தவணைக் காலம் வழங்காமல் தோல்வி அடைந்து விட்டனர் என குறை சொல்வது எவ்வகையில் நியாயமாகும்? என்று கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply