பூமிபுத்ராக்களுக்கு 97%, இந்தியர், சீனர்களுக்கு 3% தானா?

Malaysia, News, Politics

 304 total views,  1 views today

கோலாலம்பூர்,நவ.12-

வரும் காலத்தில் அமையவுள்ள அரசாங்கம் தாக்கம் செய்யும் புதிய வரவு செலவு திட்டம் இன ரீதியிலான கோட்டா முறையை பயன்படுத்தாமல் மலேசிய சமூகம் எனும் அடிப்படையில் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் கரீம் மக்களவையில் அறைகூவல் விடுத்தார்.

நாட்டின் வரவு செலவு திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு 97 விழுக்காடு ஒதுக்கீடுகள் செய்யப்படும்போது இந்தியர், சீனர் சமூகத்திற்கு 3 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுவது எவ்வகையில் நியாயமாகும்?

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நாட்டின் வரவு செலவு திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு வெ.11.4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்தியர், சீனர் சமூகத்திற்கு வெறும் வெ.345 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது பூமிபுத்ராக்களை காட்டிலும் 3  விழுக்காடு மட்டுமே. இது ,மிகப் பெரிய இடைவெளியை உள்ளடக்கியுள்ளது.

இஸ்லாம் எனும் முறையில் பூமிபுத்ராக்களுக்கு அதிகமாக ஒதுக்கீடுகள்  செய்யப்படுவதை பெருமையாகக் கருதுகிறேன். ஆனால் அதே வேளையில் இந்தியர், சீனர் சமூகத்தினர் வஞ்சிக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

நாங்கள் என்ன இந்நாட்டின் இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களா? என பூமிபுத்ரா அல்லாத சில நண்பர்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

மலேசியக் குடும்பம் கொள்கையை விமர்சித்தால் பொங்கி எழும் அரசாங்கத் தரப்பினர் அனைத்துத் தரப்பினருக்குமான சமமான கொள்கையை ஏன் பின்பற்றுவதில்லை.

பூமிபுத்ராக்களுக்கு பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இன்ன்மும் சமூகத்தில் ஏழ்மை நிலை நிலவிக்கொண்டிருக்கிறதே.  இந்நிலையில் பின் தங்கிய நிலையில் உள்ள இந்திய சமூகத்தின் நிலை எவ்வாறு மாறக்கூடும்?

அடுத்தாண்டு இதே அரசாங்கம் இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை 15ஆவது பொதுத் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமைந்தால் புதிதாக தாக்கல் செய்யப்படும் நாட்டின் வரவு செலவு திட்டம் கோட்டா முறையிலான இன பாகுபாட்டை உள்ளடக்காமல் அனைத்து இன மக்களுக்குமான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply