பெக்கோவில் களமிறங்குகிறார் கண்ணன் மாரியப்பன்

Uncategorized

 135 total views,  1 views today

ஜோகூர்பாரு-

விரைவில் நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக ஜசெகவின் கண்ணன் மாரியப்பன் களமிறங்குகிறார்.

பெக்கோக் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடாத நிலையில் கண்ணனின் பெயர் முன்மொழியப்பட்டு அதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.


ஜோகூர் மாநில ஜசெகவின் மத்திய செயலவை உறுப்பினராக கண்ணன், இத்தொகுதியின் மண்ணின் மைந்தராகவும் களமிறங்குகிறார்.


ஜோகூர் மாநிலத்தை நம்பிக்கைக் கூட்டணி வெல்லும் நிலையில் பெக்கோக் சட்டமன்றத்தில் வெற்றி பெறும் வேட்பாளர் பெக்கோக் மக்களுக்குத் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க அவரை ஆட்சிக்குழுவில் இடம்பெறச் செய்யப்படலாம் எனத் தாம் எண்ணுவதாக இராமக்கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply