பெண்ணிடம் பாலியல் சீண்டலா? பொய் தகவலுக்கு எதிராக மஇகா இளைஞர் பிரிவு போலீஸ் புகார்

Malaysia, News

 183 total views,  1 views today

சுங்கை சிப்புட், நவ.29-

சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவினர் பெண் ஒருவரிடம் எந்தவொரு பாலியல் அத்துமீறலையும் புரியவில்லை. மாறாக தனக்கும் மஇகா இளைஞர் பிரிவினரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்று சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் சந்திரசேகரன் மாரி தெரிவித்தார்.

மழை பெய்தாலே கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் தாமான் முஹிபா ஜெயா குடியிருப்புப் பகுதியில் கடந்த 25ஆம் தேதி சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவினர் துப்புரவுப் பணியை மேற்கொண்டிருந்தனர். அங்கு நடந்து கொண்டிருக்கும் வேலை புகைப்படம் எடுக்கச் சொல்லி சுங்கை சிப்புட் மஇகா சேவை மைய ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார் தம்மை பணித்தார். அதன் அடிப்படையில் அங்கு சென்று துப்புரவுப் பணியினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு சீன ஆடவர் வந்து இங்கு யாரும் சுத்தம் செய்ய வேண்டாம், இது எங்கள் நிகழ்வு என்றார். அப்போது கோலகங்சார் நகராண்மைக் கழக அதிகாரிகள் வந்து மஇகாவினர் கால்வாய்களை உடைப்பதாக தகவல் வந்தது என கூறினர். அப்போது இந்திராணி எனும் பெண்மணியுடன் இருந்த ஆடவர் நாங்கள் வேலை செய்வதை புகைப்படம் எடுத்தார். ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று அவரை கேட்டேன். அதற்குள் இந்திராணி வாக்குவாதம் செய்ய தொடங்கி விட்டார். அதன் பின்னரே அங்கு காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது.

இது தான் அங்கு நடந்த சம்பவம். பாலியல் அச்சுறுத்தல் எதுவும் அங்கு இடம்பெறவில்லை. ஆனால் ஏன் இந்திராணி எங்கள் மீது பொய்யான தகவலை பரப்புகிறார் என்பது தெரியவில்லை. இதனால் தனக்கு குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பொய்யான தகவலை பரப்பும் இந்திராணி மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் புகார் செய்துள்ளதாக சந்திரசேகரன் சொன்னார்.

மேலும், இது குறித்து பேசிய சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் கி.மணிமாறன், இது மஇகாவுக்கு மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கி திட்டமிட்டு பகிரப்பட்ட பொய் தகவலாகும். ஒரு பெண்மணியிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் அளவுக்கு மஇகா இளைஞர் பிரிவினர்  தரம் தாழ்ந்து விடவில்லை.

இவ்விவகாரம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள புகார் தொடர்பில் போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மணிமாறன் வலியுறுத்தினார்.

Leave a Reply