பெண் புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமை ஆசிரியரின் முயற்சியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும் தாமான் மெலாவாத்தி தமிப்பள்ளி மாணவி அணுஶ்ரீ இரவிச்சந்திரன் !

Education, Indian Student, Malaysia, Malaysia, Sports, Tamil Schools

 160 total views,  2 views today

கோம்பாக் – 23 ஜூலை 2022

மாவட்ட நிலையிலான MSSD போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில நிலைக்கு முன்னேறி இருக்கிறார் தாமான் மெலாவாத்தி தமிப்பள்ளி மாணவி அணுஶ்ரீ இரவிச்சந்திரன்.

இந்தியர்கள் அதிகம் தடம் பதிக்காத போட்டியாகக் கருதப்பட்டு வந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் இப்போது நமது மழலைச் செல்வங்கள் வெற்றிகளைப் பதித்து வருவது பெருமைக்குரியதாகும்.

ஆறு வயது முதலே ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முறையானப் பயிற்சியை மேற்கொண்டு வந்ததாக அணுஶ்ரீயின் தாயார் மகேஸ்வரி தெரிவித்தார்.

ஆனால், கோவிட்-19 பெருந்தொற்று முடக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி நிலையத்திற்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள அணுஶ்ரீயால் முடியவில்லை. மேலும், தற்போது வீட்டிற்கு மிக அருகில் உள்ள பயிற்சி நிலையமும் நிரந்தரமாய் மூடப்பட்டு விட்டதையும் மகேஸ்வரி குறிப்பிட்டார்.

இருந்தும் இந்த விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் இணையக் காணொலிகளைப் (யூடியூப்) பார்த்து அடிக்கடி பயிற்சி செய்து வருவதாகவும் அணுஶ்ரீயின் தாயார் சொன்னார்.  

இருந்தும், தமது மகளின் திறமையை அறிந்த தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் புறப்பாட ஆசிரியர் ரீத்தாவும் ஆசிரியை பாரதியும், தமது மகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து மாவட்ட நிலையிலான ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு அனுப்பி வைத்தனர் என தாயார் மகேஸ்வரி மேலும் சொன்னார்.

103 ஆண்டு காலம் பழமை வாய்ந்த மெலாவாத்தி தமிப்பள்ளியில் இருந்து ஜிம்னாஸ்டிக் ப்போட்டியில் கலந்து கொண்டு தற்போது மாநில நிலைக்கு முன்னேறி இருக்கும் முதல் மாணவி எனும் பெருமையை அணுஶ்ரீ பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

எம்ஆர்டி – எல்ஆர்டியில் ஃபோர்மேனாகப் பணிபுரியும் இரவிச்சந்திரனின்  மகளான அணுஶ்ரீ, எதிர்வரும் 25 & 28 ஆம் நாள் தஞ்சோங் காராங்கில் உள்ள ஒரு தேசியப்பள்ளியில் நடைபெற இருக்கும் மாநில நிலையிலான ஜிம்னாஸ்டிக் போட்டியின் தமது வெற்றியை அடைய இலக்கு கொண்டுள்ளார்.

நம்மவர்கள் வழக்கமாகப் பங்கேற்கும் விளையாட்டுகளைத் தாண்டி இது போன்ற சில விளையாட்டுகளில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள நமது அடுத்தத் தலைமுறையின் திறமையை அடையாளம் கண்டு அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் புறப்பாட நடவடிக்கை ஆசிரியை ரீத்தாவுக்கும், தமது மகளைப் போட்டிக்கு அழைத்துச் சென்று உற்சாகம் கொடுத்து பக்க பலமாக நின்ற ஆசிரியயை பாரதிக்கும் அணுஶ்ரீயின் குடும்பத்தார் நன்றியைத் தெரிவித்தனர்.

அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறி பல வெற்றிகளைப் புரிய ஐ சேனல் அணுஶ்ரீ இரவிச்சந்திரனை வாழ்த்துகிறது !

Leave a Reply