பெரிக்காத்தான் நேஷனல் அரசு கவிழ்ந்து விட்டது- அன்வார்

Malaysia, News, Politics

 152 total views,  2 views today

கோலாலம்பூர்-

பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிராத பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இங்கே கூடியுள்ள நிலையில் இன்னும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளனர்.
அதனால் தற்போதைய பெரிக்காத்தான் நேஷனலுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது என்று டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Leave a Reply