பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் 11 இந்திய வேட்பாளர்கள்

Malaysia, News, Politics

 125 total views,  1 views today

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் 11 இந்திய வேட்பாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் களமிறங்கியுள்ளனர்.

பெர்சத்து கட்சியின் சார்பில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ இருதயநாதன் கேப்ரியல், சிகாமாட் தொகுதியில் பூபாலன் பொன்னுசாமி,
கெராக்கான் கட்சியின் சார்பில் சிகாம்புட் தொகுதியில் பிரபாகரன் வைத்திலிங்கம், பூலாய் தொகுதியில் தீபக் ஜெய்கிஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சட்டமன்றத் தொகுதிகளில் பெர்லிஸ் இண்ட்ரா காயாங்கானில் பெர்சத்து சார்பில் பிரமோத் பூவன்,பெர்சத்து சார்பில் பேரா புந்தோங் தொகுதியில் ஆதி.சிவசுப்பிரமணியம்,பாஸ் இந்திய ஆதரவு பேரவையின் சார்பில் பேரா, ஜெலாப்பாங் தொகுதியில் காளிதாஸ் மகாராஜா, பாசீர் பெடாமாரில் சூரியநாராயணன் சன்னாசி நாயுடு, பாஸ் கட்சியின் சார்பில் சுங்காய் தொகுதியில் திலக் ராஜ் குணசேகரன், பெர்சத்து சார்பில் சிம்பாங் பூலாயில் செல்வம் குஞ்ஜம்பு, கெராக்கான் சார்பில் பகாங், பிலூட்டில் டத்தோஸ்ரீ சந்திரா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

Leave a Reply