பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையிலும் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன்

Uncategorized

 222 total views,  3 views today

புத்ராஜெயா-

எந்தவொரு தரப்பினரும் நாடாளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வரையிலும் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
அவ்வாறு வேறு நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருப்பதை நிருபித்தால் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவது மட்டுமல்ல ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்படும்.
இப்போது தனக்கு இரு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை சந்திப்பது, மற்றொன்று பிரதமர் பதவியிலிடுந்து விலகுவது. இதில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதே சிறந்த வழியாக இருக்கும். புதிய பிரதமரை நியமனம் செய்யும் அதிகாரத்தை மாமன்னரிடமே விட்டு விடுகிறோம்.
ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருப்பதை வேறு எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினராலும் இந்த நிமிடம் வரை நிரூபிக்க முடியாது என்று அவர் இன்று மக்களுக்கு ஆற்றிய சிறப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a Reply