பெரும் விபத்தை தவிர்க்கவே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது

Malaysia, News

 259 total views,  2 views today

ஜோகூர்பாரு-

பெரும் விபத்தை தவிர்ப்பதற்காகவே பிரதமரின் வாகன பயணத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது என்று ஜோகூர்பாரு உத்தாரா காவல்துறை ஆணையர் ரூபியா அப்துல் வாஹிட் கூறினார்.

கடந்த சனிக்கிழமை ஜோகூர்பாரு மாலில் நடைபெற்ற மலேசிய குடும்பம் நிகழ்வுக்காக ஜாலான் டங்கா பாயிலிருந்து ஜாலான் ஜோகூர்பாருவிற்கு பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சென்று கொண்டிருந்தபோது சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

பிரதமரின் பயண வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை மோதி பெரும் விபத்துக்குள்ளாவதை தவிர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

ஆயினும் பிரதமரின் பயணத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனம் 30 வினாடிகள் மட்டுமே நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Leave a Reply