பெர்கேசோ – FOODPANDA உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

Economy, Local, Malaysia, News

 218 total views,  1 views today

கோலாலம்பூர் – 13 ஏப்பிரல் 2022

 1. மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ, நாட்டில் உள்ள தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் சுயதொழில் புரிபவர்களுக்கான சமூக பாதுகாப்பு வலையை வழங்குவதில் முக்கியப் பங்கும், பொறுப்பும் வகிக்கிறது.  
 • Foodpanda நாட்டில் கிக் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் பரிச்சயமான பெயர். பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி,  இளைய தலைமுறையினருக்கு வருமானத்திற்கான ஆதாரத்தையும் வழங்கியுள்ளது.
 • இவர்களின் ஒத்துழைப்பு குறிப்பாக சுயதொழில் புரிவோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
 • Delivery riders, சுய வேலைவாய்ப்பு சமூக பாதுகாப்புத் திட்டத்தால் வழங்கப்படும் சிறந்த பாதுகாப்புக்குத் தகுதியானவர்கள்.
 • இதுவரை 360 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் பதிந்துள்ளார்கள். அதே வேளையில் பணியிட விபத்தின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

 • இல் 1498 பேர் தற்காலிக இழப்பிற்கான நன்மையையும், 147 வாரிசுதாரர்கள் இறப்பிற்கான பாதுகாப்பு நிதியையும்  பெற்றுள்ளனர்.
 • ஆக சுயதொழில் புரிவோர் உடனடியாகச் சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பங்களிக்க வேண்டும்.
 • உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
 • சுயவேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு நீங்கள் பங்களித்தால், பணியிட விபத்தினால் ஏற்படும் சிகிச்சைச் செலவு மற்றும் அதற்கு மேற்பட்டவை SOCSO ஆல் நிதியளிக்கப்படும்.
 1. இந்தத் திட்டத்தின் கீழ் முதல் ஓராண்டிற்கு, அரசாங்கம் 80% பங்களிப்பைச் செலுத்துகிறது. மொத்த RM232.80 சென்னில், RM186.20, அரசாங்கமும், 20% RM46.60ஐ தனிநபரும் செலுத்த வேண்டும்.
 1. இந்த ஒப்பந்தம் வழி foodpanda தனது delivery riders க்கான 10%பங்களிப்பைத் தர முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது.

Leave a Reply