பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி அனைத்துலக படைப்பாற்றல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது

Malaysia, News

 247 total views,  1 views today

டி.ஆர். ராஜா


புக்கிட் மெர்தாஜம்-
அண்மையில் நடைபெற்ற INTERNATIONAL INNOVATION, CREATIVITY & TECHNOLOGY EXHIBITION (i2CreaTE 2021) அனைத்துலக நீதியிலான போட்டியில், பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்றனர்.


கோவிட் 19 பெருந்தொற்று கண்ட காலங்களில் கூட மாணவர்கள் வீட்டிலேயே இருந்து அண்மைய காலமாக பல தேசிய ரீதியிலும் மாநில ரீதியிலும் சாதனைகளை படைத்து வரும் வேளையில் இந்த அனைத்துலக சாதனை பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கு நற்பெயரை தேடி தந்துள்ளது.

EMERGENCY VENTILATOR MACHINE எனும் இயந்திரத்தை தயாரித்து தற்போது பெருந்தொற்று காலங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தும் வகையிலன உயிர் காக்கும் கருவியை உருவாக்கி படைத்தனர் . மேலும் இல்லபடிப்புக்கான Mentor Award-இன் வெண்கல விருதை அப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியம் பெற்றார்.


இப்போட்டியில் சுதோசன் த பெ அல்லப்பா, சச்சின் த /பெ காளிதாசன், மு சுவர்ஷன் , மு .சுவாதிதன் ,ப.குலோஷானா ஆகிய மாணவர்கள் பங்கெடுத்தனர் .அனைத்துலக ரீதியில் 9 நாடுகள் 284 பங்கேற்பாளர்கள் பங்குக் கொண்டனர் அதில் 211 உள்நாட்டிலும் 73 படைப்புகள் வெளிநாடுகளிலிருந்தும் படைத்தனர் .


அதில் பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் என உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கலந்துக் கொண்டனர் பள்ளிக்கு பெருமையை தேடி தரும் வகையில் இவர்களது சாதனை அமைந்தது.


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக syscore நிறுவனம் robotic, ardino, micro bit தொடர்பான பல வகுப்புகள் நடத்தி வருகின்றது. ஓர் ஆண்டு காலமாக இவ்வகுப்பில் பயின்று வரும் மாணவர்களின் சிறந்த படைப்பின் மூலம் இம்மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போட்டிக்குப் பயிற்றுவிக்கப்பட்டனர். இப்புத்தாக்கப் போட்டியின் படைப்புகளை உருவாக்குவதிலும் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் syscore நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ளது என அதன் நிறுவாக இயக்குநர் க.காளிதாஸ் கூறினார் . நம் இந்திய மாணவர்கள் எதிர்காலத்தில் ஒரு சகாப்தம் அடைவதற்கு syscore education என்றும் உறுதியாக இருக்க அதன் அஸ்திவாரத்தை இப்போதே தொடங்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.

INTERNATIONAL INNOVATION, CREATIVITY & TECHNOLOGY EXHIBITION (i2CreaTE 2021) போட்டியை முன்னிட்டு இவர் பயிற்றுநராக சேவையாற்றிய மாக்மண்டின் தமிழ்ப்பள்ளி ,அசாட் தமிழ்பள்ளிகள் இப்போட்டியில் தங்கம் வென்றதுடன் மலாக்கா குபு தமிழ்ப்பள்ளியும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியும் வெள்ளி பதக்கம் வென்றன என்பது குறிப்பிடதக்கது

மாணவர்களின் இச்சாதனை பெற்றோர்களுக்கு மட்டுமல்லாது பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் வெ.தமிழ் செல்வி, பள்ளியின் துணை தலைமையாசிரியர் கெ.தியாகராஜன் ஆகியோர் கூறினர் .

Leave a Reply