பேரா மாநிலத்தில் மஇகா வேட்பாளர்கள் தோல்வி

Malaysia, News, Politics

 31 total views,  1 views today

ஈப்போ-

பேரா மாநிலத்தில் தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் போட்டியிட்ட மஇகா வேட்பாளர்கள் எஸ்.ஜெயகோபி, டத்தோ வ.இளங்கோ, சண்முகவேலு ஆகியோர் தோல்வியை தழுவினர்.


புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயகோபி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் குமாரி துளசி மனோகரனிடம் 19,155 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார்.


சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டத்தோ வ.இளங்கோ பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர் அ.சிவநேசனிடம் தோல்வி தழுவினார். 5238 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோ இளங்கோ சிவநேசனிடம் தோல்வியை சந்தித்தார்.


தைப்பிங், அவுலோங் சட்டமன்றத் தொகுதியில் சண்முகவேலு 3756 வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்தார். இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளரான தே கோக் லிம் 20,306 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார்.

Leave a Reply