பேரா மாநில தேசிய மாதிரி மெத்தடிஸ்ட் மாலிம் நாவார் இரண்டாம் ஆண்டு மாணவிகள் சாதனை

Malaysia, News

 183 total views,  1 views today

ஈப்போ,நவ.30-

கடந்த 20.11.2021-21.11.2021 ஆம் திகதி MALAYSIAN INNOVATION INVENTION CREATIVITY ASSOCIATION (MIICA) இணையம் வழி நடத்திய அனைத்துலக அறிவியல் புத்தாக்க போட்டியில் குறைந்த மாணவர்கள் கொண்ட தேசிய மாதிரி மெத்தடிஸ்ட் மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவிகள் முதன் முறையாகக் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

தலைமையாசிரியர் திருமதி ஆ. லோகேஸ்வரி தலைமைத்துவத்தில் இயங்கும் இப்பள்ளி அவர்களின் ஊக்குவிப்பில் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மாணவி ஹனுஷ்காபிரியா த/பெ தேவிந்திரன், அவிலா தீபிகா த/பெ தியாகராஜன் ஆகிய இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஆசிரியர் திருமதி ஞானஜோதி அவர்களின் வழிக்காட்டலில், பள்ளியின் மற்ற ஆசிரியர்களின் உறுதுணையுடனும் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றதோடு MACEDONIA SPECIAL AWARDS வென்று கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதனை நிருபித்துள்ளனர்.

இப்பள்ளி நச்சுத்தன்மையற்றச் சுற்றுப்புறம் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் மூலிகையிலிருந்து கரப்பான்பூச்சு விரட்டி மருந்தைத் தயாரித்து உள்ளனர். கரப்பான் பூச்சியைக் கொண்டும் ஆய்வும் செய்துள்ளனர்.

பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், தேசிய மாதிரி மெத்தடிஸ்ட் மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து கல்வியிலும், புறப்பாட நடவடிக்கைப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்படும் என்பதனைப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஆ. லோகேஸ்வரி உறுதியாகக் கூறினார்.

எனவே இவ்வட்டார மக்கள் பிள்ளைகளை மெத்தடிஸ்ட் மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளியை நம்பி பதிவுச் செய்யலாம் என்பதனைத் தலைமையாசிரியர் தெரிவித்துக் கொண்டார். இவ்வேளையில் இப்போட்டியின் முழு செலவினை ஏற்றுக் கொண்ட பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply