பேரா மாநில தேசிய முன்னணி, ம.இ.கா வின் பாரம்பரியத் தொகுதிகளைத் திரும்ப வழங்க வேண்டும் ! – தியாகசீலன் கணேசன்

Malaysia, News, Politics

 158 total views,  1 views today

ஈப்போ – 29 ஏப்பிரல் 2022

மாநிலத் தேர்தலும் பொதுத் தேர்தலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும் என்கிற நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தங்களது தேர்தல் கேந்திரங்களை முடுக்கிவிட தொடங்கியுள்ளன.

மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்கில் கிடைத்த அபார வெற்றியின் மூலம் தேசிய முன்னணியின் பக்கம் மக்கள் ஆதரவு திரும்பி இருப்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியர்களின் தாய்க் கட்சியாக விளங்கும் ம.இ.காவும் மலாக்கா, ஜொகூர் மாநிலத் தேர்தல்களில் மூன்று சட்டமன்றங்களை வெற்றிக்கொண்டதோடு மாநில ஆட்சிக்குழுவிலும் இடம் பிடித்திருப்பது கட்சியின் தேசிய தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களது தலைமைத்துவத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.

இந்தியர்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் பேரா மாநிலத்தில் டத்தோ வ.இளங்கோ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் மாநில ம.இ.கா மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. அந்த வகையில், ம.இ.காவின் பாரம்பரிய தொகுதிகளில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை ம.இ.காவிற்கு தேசிய முன்னணி வழங்க வேண்டும் என்று பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகசீலன் கணேசன் கேட்டுக்கொண்டார்.

ஆராம்ப நாட்களில் ம.இ.கா வென்ற தொகுதிகளில், ஒரு முறை தோல்வி அடைந்த காரணத்தினாலும் இன்னும் சில காரணங்களினாலும் ம. இ.கவிடமிருந்து அத்தொகுதிகள் பறிப்போயின. தேசிய முன்னணி சகோதரத்துவ உணர்வை மதித்தும் கட்சியின் நலன்காக்கவும் பேராங், ஊத்தான் மெலிந்தாங், பசீர் பஞ்சாங் போன்ற சட்டமன்றத் தொகுதிகளை மாற்றிக்கொள்ள ம.இ.காவின் அன்றைய தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

ஆனால், அதையே ஒரு காரணமாகக் காட்டி ம.இ.கா வெற்றியடைக்கூடிய இடங்களைப் பிற கட்சிகள் உரிமை கொண்டாடுவதோடு பலவீனமான இடங்களை மட்டும் மஇகாவிற்கு வழங்கி மஇகாவை பலவீனப்படுத்தும் போக்கை தேசிய முன்னணி கைவிட்டு, பேராங், ஊத்தான் மெலிந்தாங், பசீர் பஞ்சாங் போன்ற சட்டமன்றத் தொகுதிகளில் மீண்டும் மஇகா போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தியாகசீலன் கணேசன் கேட்டுக்கொண்டார்.

இது தேசிய முன்னணியின் சகோதரத்துவத்தை அதிகப்படுத்தும் அதே வேளையில் இந்தியர்களின் குரல் ஆட்சிகுழுவில் மீண்டும் ஒலிக்கவும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply