பேருந்து கவிழ்ந்ததில் 38 தொழிற்சாலைப் பணியாளர்கள் காயம் !

Malaysia, News

 77 total views,  1 views today

– குமரன் –

ஆலோர் காஜா – 25 செப் 2022

இங்குள்ள புக்கிட் பெரெண்டாம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்ததில் 38 பேர் காயமடைந்துள்ளனர். இங்குள்ள காடிங் – கெசாங் பாஜாக் சாலை ஓரத்தில் இருக்கும் பள்ளத்தில் அப்பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அளித்த மலாக்கா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் இயக்குநர் அபு பக்கர் கத்தாயின் தெரிவிக்கயில், படுகாயம் அடைந்த ஓட்டுநர் உட்பட 13 பேர் ஜாசின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் அருகில் உள்ள கிளினிக்குகளுக்கு அனுப்பியதாகவும் அவர் சொன்னார்.

அப்பேருந்து ஓட்டுநர் 20 – 30 வயதுமிக்க மலேசியர் எனவும் தொழிலாளர்கள் யாவரும் நேப்பால், மியான்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதர செய்திகள்

3ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்கத் தயார் ! – துன் மகாதீர்

– 15வது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியின் எதிரி தேசிய முன்னணி ! – நேரடியாக அறிவித்த முகிதீன்

– பினாங்கில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் !

– முன்கூட்டியே தேர்தலா ? மூன்று விவகாரங்கள் மீது அமைச்சரவை கவலை ?

– கேமரன் மலை உட்பட 12 இடங்களைக் குறி வைக்கும் ம.இ.கா. ?

நேற்று இரவு 7.57 மணிக்கு தமது தரப்புக்குத் தகவல் கிடைத்தவுடம் 10 நிமிடங்களில் சம்அவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர் தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்ட அப்பேருந்து 150 தூரத்தில் உள்ள 50 ஆழ சாலை ஓரப்  பள்ளத்தில் அந்த பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தின் நிறுத்தக் கருவி (Break) செயல்படாமல் போனதுதான் காடணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பள்ளத்தில் விழுந்த அந்தப் பேருந்தில் சிக்கியவர்களைப் பொது மக்களின் உதவியுடன் மீட்புப் படையினர் காப்பாற்றி உள்ளனர்.

45 நிமிடங்கள் நீடித்த அந்த மீட்புப் பணியில் 27 மீட்புப் படை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Leave a Reply