பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Malaysia, News

 259 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

நிபோங் திபால்-

தென் செபராங் பிறை மாவட்டத்தில் நிபோங் திபால் தோட்டபுற பகுதியில் பன்னெட்டு காலமாக கற்றல் கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டு வரும் பைராம் தோட்ட தமிழ்ப்பள்ளிபுதிய கட்டடம் அமைக்கும் பொருட்டு அதற்கான அடிகால் நாட்டு விழா இன்று காலை கட்டுமான வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது .


பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப இராமசாமி தலைமையில் பைராம் தோட்ட அடிகல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அண்மைய காலமாக மேற்கொண்ட அயராத முயற்சியால் பைராம் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டது.

பினாங்கு மாநில அரசாங்கம் வழங்கிய நிலத்தில் இந்த புதிய தமிழ்ப்பள்ளி மிக கம்பீரமாக கட்டபடுகின்றது அதுமட்டுமின்றி பினாங்கு மாநிலத்தின் மேம்பாடுகளுக்கு மாநில அரசாங்கம் பக்க பலமாக இருக்கும், என்றும் அவர் மேலும் கூறினார்.


லடாங் பைரம் தோட்ட மக்கள் குடியிருப்பு , லாடாங் பைரம் தமிழ் தேசிய வகை தொடக்கப்பள்ளி மற்றும் ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் பகுதியில் உள்ள புதிய திடக்கழிவு குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திடக்கழிவு குப்பை கிடங்கில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு ஒரு பாதுகாப்பு மண்டலம் இருக்க வேண்டும் என சுற்றுச்சூழல் துறை நிபந்தனை விதித்துள்ளது.

மாநில அரசு ஒதுக்கப்பட்ட 8.78 நிலத்தில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில், பினாங்கு மாநில அரசு லாட் 7578, தென் செபராங் பிறை ,பைராம் தோட்ட தமிழ்ப்பள்ளி லாடாங் பைரம் குடியிருப்பளர்களுக்கு வீடுகள் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில். ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இந்த இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

ஐ-சேனல் செய்திகள்:

இங்குள்ள கட்டுமான பணிகளுக்கு பினாங்கு மேம்பாட்ட்டு கழகம் (PDC) நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு எக்கர் நிலத்தில் இங்கு புதியதாக கட்டப்படவுள்ள இரண்டு மாடி கட்டடத்தில் அனைத்து வசதிகள் கொண்ட் பள்ளியாகவும் மாணவர்களுக்கு விளையாடுவத்ற்கும் திடல் வசதிகள் கொண்ட பள்ளியாகவும் அமையப்படவுள்ளது எனது குறிப்பிடதக்கது .

Leave a Reply