பொதுத் தேர்தலை நடத்த பிரதமருக்கு நெருக்குதலா? அது எதிர்க்கட்சியின் கற்பனையே- மணிமாறன்

Uncategorized

 169 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

நாட்டின் 15வது பொதுத்தேர்தலை விரைந்து நடத்தப்பட வேண்டும் என பிரதமருக்கு நெருக்குதல் கொடுக்கப்படுவதாகவும் அந்த நெருக்குதலுக்கு பிரதமர் அடிபணியக்கூடாது எனவும் எதிர்கட்சியினர் தொடர்ந்து கருத்துரைத்து வருவது அவர்களின் கற்பனை மட்டுமே என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவர் கி.மணிமாறன் கருத்து தெரிவித்தார்.

அன்மையில் நடைபெற்ற தேசிய முன்னணி மாநாட்டில் நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலுக்கு காலம் கனிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டது.ஒரு கட்சிக்கோ அல்லது அதுசார்ந்த கூட்டணியின் தலைமைத்துவத்திற்கோ தொடர்ந்து ஆட்சியில் இருக்கவும் வெற்றி பெறவும் சரியான சந்தரப்பத்தை எதிர்பார்த்து பொதுத் தேர்தலை நடத்த உத்தேசிப்பது வழக்கமானதுதான் எனவே,இவ்வாறு கருத்துரைப்பதையெல்லாம் நெருக்குதலாக கருதுவது வேடிக்கையானது.

முன்னதாக நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் நிலையான அரசியல் தன்மை இல்லாமல் போனதை நாம் மறந்திருக்க மாட்டோம். கூட்டணிக்குள் ஏற்பட்ட சிக்கலால் துன் மகாதீர் பதவி விலகிய பின்னர் அடுத்தப் பிரதமர் யார் என்பதில் பெரும் சர்ச்சையும் இழுப்பறியும் எழுந்து டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முஹிடினுக்கான ஆதரவு மீட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இஸ்மாயில் சஃப்ரி பிரதமராக தேர்வும் செய்யப்பட்டுள்ளார்.

துன் மகாதீர் மற்றும் முஹிடின் யாசின் காலகட்டத்தில் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால்.இஸ்மாயில் சஃப்ரியின் தலைமைத்துவம் நன்நிலையில் நாட்டின் பொருளாதாரமும் சீரான அரசியல் போக்கும் தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.

நடப்பில் ஒரு கூட்டணியை சார்ந்த அரசாங்கமாய் இல்லாத சூழலில் இந்நிலை நீடிக்குமானால் சிக்கல்களும் சர்ச்சைகளும் தொடரதான் செய்யும். ஒரு நாட்டின் அமைதிக்கும் நிலையான நிலைதன்மைக்கும் பெரும்பான்மையை கொண்டிருக்கும் அரசாங்கம் மிகவும் அவசியமானது.இந்நிலையில்,நாட்டின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிலையான அரசாங்கம் அமைய நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் காலத்தின் தேவையாகவே அமைந்துள்ளது.

1ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்று 4 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் தற்போது பொதுத்தேர்தல் குறித்து விவாதிப்பதும் அதற்காக வழிவிடுவதும் அரசியல் நெருக்குதலாகாது என்பதை நினைவுறுத்த வேண்டியிருப்பதாக கூறும் மணிமாறன், நாடாளுமன்றத்தை கலைப்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் பெரும்பான்மை வகிக்கும் தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கு அதுகுறித்து பேசவும் விவாதிக்கவும் உரிமை உண்டு எனவும் கூறினார்.

அதேவேளையில், பிரதமருக்கு அவரது பொறுப்பும் கடமையும் என்னவென்பது தெரியும். அவர் யாருடைய நெருக்குதலுக்கு அடிப்பணிய மாட்டார். இருப்பினும் தேசிய முன்னணியின் முடிவையும் அவர் புரிந்துக் கொள்வார். அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்படுவதாக கூறி அரசியல் நடத்தும் எதிர்கட்சிகளின் இம்மாதிரியான பாணியை பார்த்துப் பார்த்து மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள் எனவும் மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply