
பொதுத் தேர்தலை முடிவு செய்ய இது பொருத்தமான காலமல்ல
274 total views, 1 views today
கோலாலம்பூர்-
மலாக்கா மாநில வெற்றியை அடிப்படையாக கொண்டு, அடுத்த பொதுத் தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்கு இது பொருத்தமான காலமல்ல என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கூறினார்.
மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருந்தாலும் அத்தேர்தலின்போது, 65 விழுக்காட்டினரே வாக்களித்தனர். 35 விழுக்காட்டினர் வாக்களிக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தன்னிச்சையாக போட்டியிடுமா என முடிவெடுப்பதற்கு இது சரியான தருணமல்ல அவர் சொன்னார்.