பொதுத் தேர்தல் உட்பட 4 அம்ச நிபந்தனைகள் ! – பிரதமரை நெருக்கும் அம்னோ

Malaysia, News, Politics

 80 total views,  1 views today

கோலாலம்பூர்- 27 ஆகஸ்டு 2022

பொதுத் தேர்தலை விரைந்து நடத்துவது உட்பட 4 அம்ச நிபந்தனைகளை முன்வைத்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு அம்னோ நெருக்குதலை கொடுத்து வருவதாக தகவல்கள் கசிகின்றன.

நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் அடுத்தாண்டு ஜூலை வரையிலும் நீடிக்கும் நிலையில் இவ்வாண்டுக்குள்ளாகவே 15ஆவது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்னோ எதிர்பார்க்கிறது.

பொதுத் தேர்தல் உட்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கிவது, சட்டத்துறை தலைவரை நீக்குவது, தலைமை நீதிபதியை நீக்குவது போன்ற நிபந்தனைகளை அம்னோ பிரதமருக்கு விதித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை பிரதமர் ஏற்க மறுத்தால் கட்சி உதவித் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கவும் அம்னோ தயாராகி விட்டதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply