பொது மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 2.8% அதிகரிப்பு !

Uncategorized

 150 total views,  1 views today

கோலாலம்பூர் – 1 ஆகஸ்டு 2022

பொது மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.8% அதிகரித்துள்ள நிலையில் முதலாம் இரண்டாம் பிரிவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 – 30 ஜூலைக்குள் 5.6% அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 1.4 % ஆகக் குறைந்துள்ளது என அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், ஆபத்து குறைந்த படுக்கைகள் (23%), தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் (14%,) கோவிட்-19 சிகிச்சை மையம் (7%) ஆகியன எண்ணிக்கை இன்னும் குறாஇயவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த நிலையில் நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 3.2% அதிகரித்துள்ளது.

வீட்டில் இருந்து தனிமைப்படுத்தலை மேற்கிறவர்களின் எண்ணிக்கை 0.5% குறைந்துள்ள வேளையில் கோவிட்-19 தனிமைப்படுத்தல் மையம் 0 சிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கு அனுப்பப்படும் 19.9% குறைந்துள்ளது.

Leave a Reply