போதுமய்யா உங்கள் நாடகம்- கணபதிராவ் காட்டம்

Malaysia, News, Politics

 212 total views,  1 views today

ஷா ஆலம்-

பூச்சோங், 14ஆவது மைலில் அமைந்திருக்கும் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டப கட்டுமானம் தொடர்பில் பூச்சோங் மஇகா தொகுதித் தலைவர் அவுத்தார் சிங் வெளிட்டிருக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது என்பதோடு வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாக அவரது வெளிப்பாடு அமைந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.


அவரது கூற்றின்படி சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு கடந்த 2017இல் அதன் நிலப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டது. அவ்வாலயத்தின் நிலப்பிரச்சினை தீர்க்கப்பட்டு நிலப்பட்டாவும் வழங்கப்பட்டது. 2008க்கு முன்பு வரை தீர்க்கப்படாத இப்பிரச்சினை தனது தலைமைத்துவத்தின் கீழ் தீர்க்கப்பட்டது. 2008க்கு முன்பு வரை இதே அவுத்தார் சிங் தான் அதன் கவுன்சிலராக பதவி வகித்து வந்தார்,. அப்போதுகூட அவரால் தீர்க்க முடியாத பிரச்சினை நானே தீர்த்து வைத்தேன்.


மேலும் இவ்வாலயத்திற்கு 2015இல் வெ.10,000, 2019இல் வெ.10,000 , 2020இல் வெ.10,000 என மானியங்கள் வழங்கப்பட்டு 2021க்கான மானியம் ஆண்டு இறுதியில் கோரப்பட்டதால் 2022இல் வெ.20,000 அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் இங் சு ஹான், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங், கவுன்சிலர் ஆகியோர் ஆலயத்திற்கு மானியம் வழங்கியுள்ளனர்.


தேசிய முன்னணியிலிருந்து கெராக்கான் கட்சி வெளியேறியதை அடுத்து பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி அல்லது அதன் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க வேண்டும் எனும் முனைப்போடு அவதூறு பரப்பி வருவதை அவுத்தார் சிங் நிறுத்திக் கொள்ள வேண்டும்.


இந்திய சமுதாயத்தின் பாசம் தொற்றி கொண்டதை போல் நாடமாடினால் அதை இந்திய சமுதாயம் நம்பி விடும் என கனவு காண வேண்டாம் எனவும் கணபதிராவ் காட்டமாக பதிலடி கொடுத்தார்.


இதனிடையே, அவுத்தார் சிங் வெளியிட்ட கருத்துக்கும் ஆலயத்திற்கும் சம்பந்தம் இல்லை. தெருவில் நின்று கொண்டு மக்களில் ஒருவராக குரல் கொடுப்பதால் அது ஆலயத்தை பிரதிபலிப்பதாக ஆகிவிடாது.

இவ்விவகாரத்தில் ஆலயத்திற்கும் அவுத்தார் சிங்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஆலய நிர்வாகத்தின் சார்பில் குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply