போர்ட்டிக்சனில் போட்டியிடுவதா? வேண்டாமா? இன்னும் தீர்மானிக்கவில்லை- அன்வார்

Malaysia, News, Politics

 233 total views,  2 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலின்போது போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தற்போது பிகேஆர் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் இவ்விவகாரம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் சொன்னார்.

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் பிகேஆர் தொகுதித் தலைவர் அமினுடின் ஹருன் அத்தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுவதாக பரவி வரும் செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டத்தோஶ்ரீ அன்வார், மாநில பிகேஆர் தலைவருமான அமினுடின் அத்தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுவாரா? என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று சொன்னார்.

Leave a Reply