போலீஸ் லாக்கப்பில் தூக்கிட்டு கொண்ட ஆடவர் மரணம்

Crime, Malaysia, News

 212 total views,  4 views today

செபெராங் பிறை-

போதைப்பொருள் குற்றத்திற்காக போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 59 வயது மதிக்கத்தக்க ஆடவர்  தூக்கில் தொங்கி மரணமடைந்ததை போலீசார் உறுதி செய்தனர்.

கடந்த 23ஆம் தேதி  நிகழ்ந்த இச்சம்பவத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில்  தூக்கில் தொங்கியதால் அவ்வாடவர் மரணம் அடைந்தார் என்பது உறுதி செய்யப்பட்டதாக புக்கிட் அமான் நன்னெறி பிரிவின் துணை இயக்குனர் Allaudeen Abdul Majid தெரிவித்தார்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி போதைப்பொருள் தொடர்பான இரு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட செபெராங் பிறை போலீஸ் தலைமையகத்தின் லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த சந்தேக நபர் மறுநாள் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

எனினும் அவ்வாடவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெறும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply