
ப.ராமு அறக்கட்டளையின் புதுக்கவிதைத் தொகுப்பிற்குச் செப்டம்பர் 25 வரை உங்கள் கவிதைகளை அனுப்பலாம்!
202 total views, 2 views today
கோலாலம்பூர் – 19 செப் 2022
தமிழ் இலக்கியக் காப்பகம், ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வெளிவரவிருக்கும் புதுக்கவிதைத் தொகுப்பு நூலுக்கு இதுவரை கவிதைகளை எழுதி அனுப்பிய அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றி.
‘நினைத்தவுடன் வருவதல்ல கவிதை
நெஞ்சம் கனத்தவுடன் வருவதே கவிதை’
எனும் வரிகளுக்கு ஏற்ப சிலர் தங்களது படைப்புகளை எங்களுக்குக் குறித்த நேரத்திற்குள் அனுப்ப முடியாமல் போயிருக்கலாம். மேலும் சிலர் வேலைப்பளு காரணமாகக் குறிப்பிட்ட நேரத்தில் எழுத முடியாமல் போனது.
கொஞ்சம் கால அவகாசம் நீட்டித்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுள்ளீர்கள். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு புதுக்கவிதைகளை ஒப்படைப்பதற்கான தேதி 25/09/2022, ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கவிதைப் படைப்பாளர்கள் விரைந்து உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு மேலும் காலம் நீட்டிக்கப்படாது. தங்களுடைய படைப்புகளை இத்தமிழ் உலகம் கண்டறிய நல்லதொரு வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மலேசியக் கவிஞர்களின் படைப்புகள் நிலைத்திருக்கவும், பதிவுகளாகப் பாதுகாக்கப்படவும் உயரிய நோக்கத்தோடு மனிதவள அமைச்சரும், ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ மு சரவணன் கடந்த ஆண்டு ப.ராமு அறக்கட்டளையைத் தோற்றுவித்தார்.
✒️ கவிதைகளைக் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு வழியில் அனுப்பி வைக்கவும்.
🔖அஞ்சல் முகவரி : No 14, Kompleks Damai, Jalan Lumut, 50400 Kuala Lumpur
🔖மின்னஞ்சல் : puthukavithai22@gmail.com
🔖வாட்சாப் எண் : 014-9034536 (க.பிரேமலதா)
🔖கூகுள் பாரம் : https://forms.gle/ohNaieSosjrGBN8L6