மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராக ரவீன்குமார் போட்டியின்றி தேர்வு

Malaysia, News, Politics

 269 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்,அக்.23-

மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவராக தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவீன்குமார் கிருஷ்ணசாமி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இளைஞர் பிரிவு துணைத் தலைவராக ஆண்ட்ரூ, மத்திய செயலவை உறுப்பினர்களாக அர்விந்த் கிருஷ்ணசாமி, கேசவன் கந்தசாமி ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இம்முறை மகளிர் பிரிவுக்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் நடப்பு தலைவி உஷா நந்தினியும், முன்னாள் தலைவி டத்தோ மோகனா முனியாண்டியும் போட்டியிடுகின்றனர்.

E-Paper வடிவில் செய்திகளை படிக்க கீழே அழுத்தவும்…

மஇகா புத்ரா, புத்ரி பிரிவுக்கும் போட்டியில்லாத நிலையில்  புத்ரா தலைவராக டாக்டர் கிஸ்வா, புத்ரி தலைவியாக ஷாலினி ராஜாராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று  டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரியின் 2021-2024 வரைக்குமான புதிய தலைமைத்துவத்துக்கான வேட்புமனு நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது

.

Leave a Reply