மஇகா துணைத் தலைவராக டத்தோஶ்ரீ சரவணன் நீடிக்க வேண்டும்

Malaysia, News, Politics

 214 total views,  1 views today

சுங்காய்-

இவ்வாண்டு இறுதிக்குள் நடத்தப்படலாம் என  எதிர்பார்க்கப்படும் மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் நடப்பு துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு போட்டி ஏற்படக்கூடாது என்று சுங்காய் வட்டார மஇகா கிளைத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேமுவுடன் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் மஇகாவை வலுப்பெறச் செய்ய  மஇகா தேசியத் தலைவராக டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு துணையாக ட்த்தோஶ்ரீ சரவணனும் மஇகா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்விருவரின் தலைமைத்துவத்தில் மஇகா சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அமைச்சரவையில் மஇகா பிரதிநிதியாக ஒரே அமைச்சராக திகழும் ட்த்தோஶ்ரீ சரவணனுக்கு போட்டி ஏற்படுத்தப்படக்கூடாது என்று சுங்கை சுங்காய் மஇகா கிளைத் தலைவர் முனியாண்டி, சாலாக் பாரு மஇகா கிளைத் தலைவர் ஆனந்தன், பெராங் ஸ்டேஷன்  மஇகா கிளைத் தலைவர்  வி.சுப்பிரமணியம்,  துரோலாக் மஇகா கிளைத் தலைவர் இருசன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

மேலும் உயர்மட்ட பதவிகளுக்கு போட்டி ஏற்படுத்தப்படுவது அது கட்சியில் பிளவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதோடு அடுத்த பொதுத் தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்ய தற்போதைய தலைமைத்துவம் நீடிக்கப்பட வேண்டும்.

அதோடு, உயர்மட்ட பதவிகளுக்கு போட்டி ஏற்படுத்தப்பட்டால் ஆதரவை தேடி போட்டியிடுபவர்கள் அனைவரும் நாடு முழுவதும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் . தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அத்தகைய நடவடிக்கை அபாயகரமானதாக அமையலாம் என்பதோடு போட்டியை தவிர்ப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply