மஇகா தேர்தல்; ஜெயிக்க போவது யாரு?

Malaysia, News, Politics

 186 total views,  1 views today

கோலாலம்பூர்-

மஇகாவின் 3 உதவித் தலைவர்கள், 21 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான  தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

இன்று மாலை 4.00 மணியளவில் தொடங்கும் இத்தேர்தலில் 3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் நடப்பு உதவித் தலைவர்களான டத்தோ டி.மோகன், டத்தோ சி.சிவராஜ், டத்தோ தோ.முருகையா ஆகியோருடன் ஏ.கே.ராமலிங்கம், டத்தோ அசோஜன், குணாளன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

21 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிக்கு 60 பேர் களத்தில் குதித்துள்ளனர். தீவிர போட்டியை ஏற்படுத்தியுள்ள மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான பதவிக்காக போட்டியாளர்கள் தீவிர் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதோடு சபா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் 10 நிர்வாக செயற்குழுவுக்கு 20 பேர் போட்டியிடவுள்ளனர். இதில் தெரிவு செய்யப்படும் 10 பேரில் மாநிலத் தலைவரை தேசியத் தலைவர் நியமனம் செய்வார்.

Leave a Reply