மஇகா மாநாட்டில் நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு?

Malaysia, News, Politics

 102 total views,  2 views today

கோலாலம்பூர்-

நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான அறிவிப்பை நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அந்த அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெளியிடலாம் என்று கணிக்கப்படுகிறது.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பிரதமர் மாமன்னரை சந்தித்து அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

இன்று நடைபெறும் மஇகாவின் 76ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மேல் நாடாளுமன்றம் கலைப்புக்கான அறிவிப்பு வெளிவரலாம் என நம்பப்படுகிறது.

Leave a Reply