மஇகா வேட்பாளருக்கு இந்தியர்கள் ஆதரவு வேண்டும்- வீரன்

Malaysia, News, Politics

 301 total views,  1 views today

ஜொகூர்பாரு-

வரும் சனிக்கிழமை நடைபெறும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் மஇகா – தேசிய முன்னணி வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளில் இந்திய வாக்காளர்கள் தங்களது பெரும்பான்மை ஆதரவை வழங்க வேண்டும் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்கு மஇகா என்றுமே உயிர்நாடியாகும். மஇகாவை தவிர இந்திய சமுதாயத்திற்கு சிறந்த சேவையை பிற கட்சியினரால் வழங்க முடியாது.

இந்நிலையில் புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளர் எஸ்.சுப்பையாவை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில் அங்கு தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தேசிய முன்னணியால் மட்டுமே சிறப்பான, நீடித்த ஆட்சியை வழங்க முடியும் என்பதை பெரும்பாலான இந்தியர்கள் உணர்ந்துள்ளனர் என்பதே இந்தியர்கள் மனமாற்றத்திற்கு மிகப் பெரிய காரணமாகும்.
இத்தொகுதியில் தேமுவுக்கு இந்தியர்களின் ஆதரவு பெருகியுள்ள நிலையில் இதே நிலைப்பாடு மற்ற தொகுதியிலும் எதிரொலிக்கும் என்று வீரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply