மகாதீரின் புதிய கூட்டணியை ஆதரிக்க முடியாது- அன்வார்

Malaysia, News, Politics

 382 total views,  1 views today

கோலாலம்பூர்-

மலாய்க்காரர்கள், இஸ்லாத்திற்கு முன்னுரிமை வழங்கி தோற்றுவிக்கப்பட்டுள்ள Gerakan Tanah Air எனும் புதிய கூட்டணியை தாம் ஆதரிக்கப் போவதில்லை என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வரும் 15ஆவது பொதுத்  தேர்தலில் அரசாங்கத்தை வீழ்த்த இந்த புதிய கூட்டணி துன் மகாதீர் தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது.

மலாய்க்காரர்கள் மட்டுமின்றி அனைத்து மலேசியர்களையும் கொண்ட சிறந்த தலைமைத்துவம்தான் நல்ல நிர்வாகத்திற்கு தேவை. கூடுதலான பல்லின அணுகுமுறைதான் நாட்டிற்கு தேவைப்படுவதாக அன்வார் மேலும் கூறினார்.

துன் மகாதீர் அறிவித்துள்ள Gerakan Tanah Air புதிய கூட்டணியில் பெஜுவாங் கட்சி, இமான் எனப்படும் இந்திய முஸ்லீம் கூட்டணி கட்சி, பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா), பெர்ஜாசா எனப்படும் Parti Barisan Jemaah Islamiah Se-Malaysia ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply