மக்களவை துணை சபாநாயகராக ங கோர் மிங் நியமனம் செய்யப்பட வேண்டும்- பேராக் டிஏபி

Malaysia, News

 288 total views,  1 views today

ஈப்போ-

காலியாக உள்ள மக்களவை துணை சபாநாயகர் பதவியில் முன்னாள் துணை சபாநாயகர் ஙா கோர் மிங் மீண்டும் அமர்த்தப்பட வேண்டும் என்று பேரா ஜசெக கோரிக்கை விடுத்துள்ளது.

துணை சபாநாயகராக பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் மஸ்லான் பதவியில் அமர்த்தப்படுவதை விட பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சியில் 25 மாதங்கள் துணை சபாநாயகராக சிறப்பாக பணியாற்றிய தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் துணை சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என்று பேரா ஜசெகவைச் சேர்ந்த பத்துகாஜா நாடாளுமன்ற வீ.சிவகுமார் உட்பட சில சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.


மக்களவை துணை சபாநாயகர் பதவியிலிருந்து அஸாலினா ஒத்மான் அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து அப்பதவி வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

Leave a Reply