மக்களின் அதிருப்தியால் தேசிய முன்னணி வெற்றி பெறுவது கடினம் ! – இரஃபிஸி இரம்லி

Malaysia, News, Polls

 48 total views,  2 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 25/10/2022

தேசிய முன்னணி மீது பெரும்பான்மை மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதால் எதிர்வரும் 15ஆம் பொதுத் தேர்தலில் அக்கூட்டணி வெற்றி பெறூவது மிகவும் கடினம் எனக் கூறினார் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் இரஃபிஸி

பிகேஆர் கட்சி திரட்டியத் தரவுகளின் அடிப்படையில், மத்திய அரசை வழிநடத்தி வரும் அம்னோவின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் ஆட்சியின் மீது 63% மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், 78 விழுக்காட்டினர் நாட்டின் பொருளாதார நிலை குறித்து மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும் அவர் சொன்னார். அதன் அடிப்படையில், வரும் பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், 18 வயது முதல் 24 வயது வரையிலான இளம் வாக்காளர்களின் மனநிலையை அறிவது மிகவும் கடினம்.

தமது கட்சி கொன்டிருக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில், தற்போதையப் பொருளாதார நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் நாட்டை அரசாங்கம் நிர்வகிக்க இருக்கும் விதம் குறித்தும் 84 விழுக்காட்டினர் வருத்தம் கொண்டிருப்பதாகவும் இரஃபிஸி சுட்டிக் காட்டினார்.

நம்பிக்கைக் கூட்டணி இப்பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருமேயானால், நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களைத் தீர்க்க மிகப் பெரிய சவாலைச் சந்திக்கும் எனவும் அவர் சொன்னார்.

மேலும், பிடிபிடிஎன் எனப்படும் உயர்க்கல்விக் கடனுதவி பிரச்சனையையும் தேசிய முன்னணி அரசாங்கத்தால் தீர்க்க முடியவில்லை.

ஆகையல், கடந்த 2018ஆம் ஆண்டில் பிடிபிடிஎன் கடன் 40 பில்லியனை எட்டியது. எனவே, ரிம 4,000க்கும் மேல் வருமானம் பெறுகிறவர்கள் கண்டிப்பாக அதனைத் திரும்பச் செலுத்த வலியுறுத்தினோம். அவ்வாறான வருமானம் இல்லாதவர்கள் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை எனக் கூறினோம். அதனைச் செலுத்த வேறு வழிகளைத் தேடினோம்.

இருந்த போதிலும், தேசிய முன்னணியால் ஏற்பட்டக் கடன் மிகவும் அதிகம் எனக் கூறிய இரஃபிஸி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து அதனை வலுப்படுத்தும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்றார்.

Leave a Reply