மக்களின் மனமாற்றம் தேமுவுக்கு சாதகமாகும்- வீரன்

Malaysia, News, Politics

 487 total views,  3 views today

ஜோகூர்பாரு-

வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநில தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள மனமாற்றம் தேசிய முன்னணியின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது.  இது ஜோகூர் மாநில தேர்தலிலும் எதிரொலிக்கும்.

தேமு சின்னத்தின் கீழ் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகளின்போது இந்தியர்கள் மட்டுமல்லாது பிற இனத்தவர்களிடமும் ஆதரவு பெருகி வருகிறது.

2018க்கு பின்னர் மக்கள் மத்தியில் காணப்படும் மனமாற்றம் ஜோகூரில் நிலையான ஆட்சியாக தேசிய முன்னணியை மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பர் என்பது புலப்படுவதாக மஇகா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தைப்பிங் தொகுதி  மஇகா தலைவருமான வீரன் கூறினார்.

Leave a Reply